மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜெயிலர் 3வது பாடல் அப்டேட்! 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் 3வது பாடல் குறித்த அப்டேட்டினை படக்குழு வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :25 ஜூலை 2023, 1:07 pm

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

இப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் இணையத்தில் வைரலான நிலையில், ஹுக்கும் எனத் தொடங்கும் 2வது பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை பெற்று வருகிறது. ஹுக்கும் எனும் பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. யூடியூபில் 1.2 கோடி பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் நாள் வெளியாக உள்ள நிலையில் படத்தின் 3வது பாடல் ஜுஜுபி நாளை மாலை 6 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

Story image

ஏற்கனவே வெளியான 2 பாடல்களும் தீயாக உள்ள நிலையில் 3வது பாடலுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.