கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே இனிமேல் நடிப்பேன் என்று மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றிபெற்றது. தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மாளவிகாவின் கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில், மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்றில், “இனிமேல் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் படமாக இருந்தாலும், எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத படங்களில் நடிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | தளபதி 68 அப்டேட் சும்மா தெறிக்கும்: வெங்கட் பிரபு
மேலும், “படம் நன்றாக ஓடி வசூலை குவித்தாலும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரமாக இருந்தால் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். நான் சிறுவயதில் இருந்து விரும்பும் நடிகைகள் ஷோபனா, ஊர்வசி, கஜோல் போன்றோர் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் பதியும் கதாபாத்திரத்தில் நடித்தார்கள். அவர்கள் வழியில் நானும் செல்ல நினைக்கிறேன்.” என்று பேட்டி அளித்துள்ளார்.
மாளவிகா மோகனனின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.