ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனாஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு! மார்ச் - 17 முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரைமார்ச் 3 முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்!வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை! ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

தளபதி 68 அப்டேட் சும்மா தெறிக்கும்: வெங்கட் பிரபு 

நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தின் அப்டேட் தெறியாக இருக்குமென இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். 

Updated On :

நடிகர் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த மாநாடு படத்தினை இயக்கிய வெங்கட் பிரபுவிற்கு அடுத்தப் படமான கஸ்டடி மோசமான விம்ர்சனங்களை சந்தித்தது. அடுத்து நடிகர் விஜய்யுடன் தளபதி68 படத்தினை இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இப்படத்தின் மூலம் விஜய்யுடன் வெங்கட்பிரபு முதன்முறையாகவும், அதே சமயம் யுவன்சங்கர் ராஜா இரண்டாவது முறையாகவும் கூட்டணி அமைக்க உள்ளனர்.

இந்நிலையில் இன்று வெங்கட் பிரபு நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் அப்டேட்டினை வெளியிட்டார். விஜய் பட அப்டேட் என நினைத்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஏமாற்றமடைந்த ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்தபோது அதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு, “தளபதி 68 சும்மா தெறிக்கும். காத்திருங்கள்” என பதிலளித்துள்ளார். 

விஜய் தற்போது லியோ படப்பிடிப்பினை முடித்து சுற்றுலா சென்றுள்ளார். லியோ திரைப்படம் அக்.19ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.