25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

எந்தப் பாட்டு போட்டாலும் செட் ஆகுது: ஃபஹத் ஃபாசிலை கொண்டாடும் ரசிகர்கள்! 

மாமன்னன் படத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்திருந்த கதாபாத்திரத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Published On :2 பிப்ரவரி 2024, 8:15 am IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என்பதால் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மாமன்னன் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல் வெளியானது. 

மாமன்னன் திரைப்படம் வெளியாகி 9 நாள்களில் ரூ.52 கோடி வசூல் செய்ததாக அமைச்சர் உதயநிதி முன்னதாக தெரிவித்து இருந்தார். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 27இல் வெளியானது.

ரத்னவேலுவாக நடித்த ஃபஹத் ஃபாசில் கதாபாத்திரம் ஆதிக்க சாதியினை சேர்ந்த கதாபாத்திரமாக நடித்திருப்பார். வில்லனே அவர்தான். ஆனால் தற்போது ஓடிடியில் வெளியான பிறகு அவரது நடிப்பினை பாராட்டி ரசிகர்கள் தாறுமாறாக எடிட் செய்து விடியோக்களை பதிவிடுகின்றனர். படம் பார்க்காதவர்கள் யாரவது இந்தப் பாடல்களை எல்லாம் பார்த்தால் ஃபஹத் ஃபாசில்தான் ஹீரோ என நினைக்க வாய்ப்புகள் அதிகம். 

ட்விட்டரில் ஃபஹத் ஃபாசில் எனும் ஹேஷேக் டிரெண்டிங்கில் உள்ளது. இதில் பலரும் எந்தப் பாட்டு போட்டாலும் செட் ஆகுது என்று கூறி வருகின்றனர். மேலும் ஃபஹத் ஃபாசில் மாதிரி ஒருவரை நடிக்க வைத்தால் இப்படித்தான் ஆகுமெனவும் ரசிகர்கள் ஃபஹத்தினை புகழ்ந்து வருகின்றனர். ஆனால் இயக்குநர் மாரி செல்வராஜின் நோக்கமே வேறொன்றாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.