சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். சைத்ரா ரெட்டிக்கு ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் முதன்மையானது கயல் தொடர். கடந்த வாரம் டிஆர்பி பட்டியலிலும் எதிர்நீச்சல் தொடரை பின்னுக்குத் தள்ளி, கயல் தொடர் முதல் இடத்தைப் பிடித்திருந்தது.
கடந்த 2021 முதல் சன் தொலைக்காட்சியில் வாரம்தோறும் இரவு 7.30 மணிக்கு கயல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் ஒளிபரப்பான தொடக்கம் முதலே அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று வருகிறது.
சன் தொலைக்காட்சியில் ஆரம்பம் முதலே அதிக அளவு டிஆர்பி பெற்ற தொடரும் கயல்தான். இந்தத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை சைத்ரா ரெட்டி சமீபத்தில் தனது 28வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
தனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிய அவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்தார்.
அதில் சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில், ரசிகர் ஒருவர், ஒருபடி மேலே சென்று சின்னத்திரை கீர்த்தி சுரேஷ் சைத்ரா எனக் குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனை சின்னத்திரையில் நடித்துவரும் நடிகர்கள் சிலரும் தங்களின் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகை சைத்ராவின் சிரிப்பு கீர்த்தி சுரேஷின் சிரிப்பைப்போன்று இருப்பதாகவும், இருவரும் அழகில், நடிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்றும் ரசிகர்கள் கமெண்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருசிலர் கீர்த்தி சுரேஷின் சிரிப்பை கேலி செய்வதைப் போல, சைத்ராவின் சிரிப்பையும் கேலி செய்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.