தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

ஆதிபுருஷ்: 3வது நாளில் ரூ.340 கோடி வசூல்- நடிகர் பிரபாஸ் நெகிழ்ச்சி! 

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் 3 நாளில் ரூ.340 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Updated On :

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம்  ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ். சீதாவாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார். 

ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஜூன் 16 ஆம் தேதி வெளியானது. படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. படமும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

உலகம் முழுவதும் 2 நாளில் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் 3வது நாளில் ரூ.340 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

நடிகர் பிரபாஸ் இதனை பகிர்ந்து பாக்ஸ் ஆஃபிஸில் மீண்டும் உச்சத்தை நிலைநிறுத்தியுள்ளது என நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். 

Story image

பிரபாஸ் ரசிகர்கள் பாக்ஸாபிஸ் கிங் என கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் காலி தியேட்டரில் எப்படி இவ்வளவு வசூல் என கிண்டல் செய்து வருகின்றனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.