மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்து தமிழில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராகவும் இளைய தலைமுறை இயக்குநர்களில் முக்கிய இயக்குநராகவும் கவனிப்படுகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இதையும் படிக்க: காஜல் அகர்வாலின் 60வது பட அப்டேட்!
முதலில் வங்கியில் வேலை செய்து வந்த லோகேஷ் பின்னர் குறும்படங்கள் இயக்கினார். தற்போது திரைப்படங்களை இயக்கி வருகிறார். விஜய்யுடன் லியோ படத்தினை இயக்கி வருகிறார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார். அதில் கூறியதாவது:
நான் நிறைய படங்கள் எடுக்க விரும்பவில்லை. 20 வருடங்கள் இருக்க விரும்பவில்லை. நான் 10 படங்களுக்கு மேல் இயக்க மாட்டேன். அதுதான் நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். தற்போது 5வது படமாக லியோ எடுத்து வருகிறேன். எனக்கு இந்தப் படத்தின் எண்ணிக்கையைவிட விஜய் அண்ணாவுடன் இருப்பது மிகவும் பிடித்துள்ளது. மக்களுக்கு பிடிப்பதால் படங்கள் இயக்குகிறேன். எல்சியூவும் மக்களுக்கு பிடிப்பதால் செய்வேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆக்ஸட் 1 ஆம் தேதி தில்லியில் இ20க்கு எதிராக ஆம் ஆத்மி ஆா்ப்பாட்டம்: அரவிந்த் கேஜரிவால்

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை!

முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்ததாக வழக்கு! விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ பிணை: விசாரணை ஒத்திவைப்பு

தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பே முதன்மை இலக்கு: எஸ்.பி. இரா. சிவ பிரசாத்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



