
லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர் ஸ்கிரிப்ட் பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து அஜித் விலகுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
‘கழகத்தலைவன்’ படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் ஏகே62 இருக்குமெனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிக்க: காதல் தோல்வியால் இரவெல்லாம் அழுதிருக்கிறேன்: நடிகை ஆத்மிகா!
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் ஏகே 62 படத்தினை நீக்கி விக்கி6 என மாற்றினார். மேலும் கவர் பிக்சரையும் மாற்றினார். அதில் ‘நெவர் கிவ் அப்’என்ற வாசகம் பதிந்துள்ளது.
இந்நிலையில் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் கூறியதாவது:
என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி !!!
இதையும் படிக்க: படப்பிடிப்பில் சதமடித்த ஜெயிலர்!
வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது! இதயத்திலிருந்து நேரடியாக எனது 6வது படத்தினை தொடங்குகிறேன்.
இந்த கடினமான நேரத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. இந்த அசாத்தியமான சூழலில் என் மீது வைத்த நம்பிக்கைகள் என்னை இக்கட்டான சூழலில் மீட்டெடுத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.