மீசையை முருக்கு படத்தில் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. ஹிப் ஹாப் ஆதி எழுதி இயக்கிய இந்தப் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. பிறகு கோடியில் ஒருவன், காட்டேரி போன்ற படங்களில் நடித்துள்ளார். நரகாசூரன் படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது உதநிதி ஸ்டாலினுடன் நடித்துள்ள மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் 'கண்ணை நம்பாதே'. இதில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க: சந்திரமுகியாக நடிப்பது லக்ஷ்மி மேனன்?
சித்து குமார் இசையமைத்துள்ளார். படத்தை லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரித்துள்ளார்.படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் நிறைந்தவையாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஆத்மிகா தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். அந்தப் பேட்டியில் ஆத்மிகா கூறியதாவது:
காதல் தோல்வியினால் சில முறை இரவெல்லாம் அழுதிருக்கிறேன். நான் பிரேக் அப் பண்ணவில்லை. என்னை காதலித்தவர்தான் பிரேக் அப் செய்தார். ஆனால் அதற்காக தற்போது மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு ரக்கட் பாய்ஸூம் வேண்டாம் சாக்லேட் பாய்ஸூம் வேண்டாம். சாதரணமான நல்ல மனிதராக இருந்தால் போதும். பணமா புகழா முக்கியமென்றால் பணம்தான் முக்கியமென்பேன். ஏனெனில் அதுதான் எதார்த்தம்.