ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசை - அனிருத். ஜவான் படத்திற்காக நடிகர் ஷாருக்கானுடன் 200 பெண் ஸ்டண்ட் கலைஞர்கள் சண்டையிட்ட காட்சி படமாக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இதையும் படிக்க: கமல்ஹாசனுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்
யானிக் பென் என்பவர் இந்தப் படத்திற்கு சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இவருடன் இன்னும் பலர் சண்டைக்காட்சிகளுக்கென்றே பிரத்யேகமாக பங்குபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்தப் படத்திலிருந்து ஷாருக்கான் வெறித்தனமாக சண்டையிடும் 6 நொடி சண்டைக்காட்சிகள் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது.
இந்நிலையில், வருகிற ஜூன் 2 ஆம் தேதி ஜவான் வெளியாக இருந்தது. தற்போது, இப்படத்தை அக்டோபர் மாதம் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தலுக்கு பிறகு கே.கே.நகா் அலங்கார வளைவு அகற்றப்படும்: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

தபால் வாக்குப் பதிவில் குளறுபடி: தேவகோட்டையில் தவெகவினா் சாலை மறியல்

கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் தலைமை மாற்றம்

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: டிடிவி தினகரன்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


