இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்! 

இந்த வாரத்தில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன. 
இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்! 

இந்த வாரத்தில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன. 


சாகுந்தலம்: 

சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் கதை மற்றும் இயக்கத்தை ருத்ரமாதேவி பட புகழ் குணசேகரன் ஏற்றிருந்தார். மகாகவி காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாப்பாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்திருந்தனர்.

இந்தப் படம் பல மொழிகளில் மே 12ஆம் நாள் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

சொப்பன சுந்தரி : 

"லாக்கப்' படத்தை இயக்கிய எஸ். ஜி. சார்லஸ் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நட்த்திருந்தார். தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்தப் படம் மே 12ஆம் நாள் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

திருவின் குரல்: 

லைகா தயாரிப்பில் அருள்நிதி நடிப்பில் ஷரிஷ் பிரபு இயக்கத்தில் இந்தப் படம் ஏப்ரல் 14இல் வெளியானது. பாரதிராஜா, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மருத்துவமனை குற்றங்கள் தொடர்பாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படம் மே 12ஆம் நாள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

யாத்திசை: 

இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் பாண்டிய மன்னர்களின் வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘யாத்திசை’. சக்தி மித்திரன், சேயோன், ராஜலட்சுமி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்தப் படம் மே 12ஆம் நாள் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ருத்ரன்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ருத்ரன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகியது. ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கியுள்ளார்.
 
மே 14 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

டிரையாங்கல் ஆஃப் சேட்னஸ்: 

95வது ஆஸ்கர் விருதுக்கு 3 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட படம்தான் டிரையாங்கல் ஆஃப் சேட்னஸ் (Triangle of Sadness) . இந்தப் படம் நகைச்சுவை கலந்த த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்தப்படம் மே 12ஆம் நாள் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com