
திரைப்படங்களை இயக்குவதில் விருப்பமில்லை என இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தெரிவித்துள்ளார்.
‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்களைப் பெற்றவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.
இவர் மேற்பார்வையில் உருவான ‘மாடர்ன் லவ் சென்னை’ இணையத் தொடர் அமேசான் பிரைமில் நாளை(மே - 18) வெளியாகிறது. இதில் ‘நினைவோ ஒரு பறவை’ என்கிற ஒரு எபிசோடையும் தியாகராஜன் இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க: நெல்சன் இயக்கத்தில் தனுஷ்?
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய தியாகராஜன் குமாரராஜா, ‘திரைப்படங்களை இயக்குவதில் எனக்குப் பெரிய விருப்பமில்லை. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை படம் எடுப்பதால் என்னை அது பெரிதாக பாதிக்கவில்லை. வேற எதாவது செய்யலாம் என்றாலும் மற்றதை விட சினிமா சிறந்ததாக இருக்கிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.