பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

சாகுந்தலம் இவ்வளவுதான் வசூலா? அதிர்ச்சியில் சமந்தா

பெரும் எதிர்பார்ப்புடன் சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் தோல்வியடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

News image
Updated On :17 மே 2023, 6:23 am

DIN

பெரும் எதிர்பார்ப்புடன் சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் தோல்வியடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான சாகுந்தலம் இதுவரை உலகம் முழுவதும் வெறும் ரூ.10 கோடி மட்டுமே வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட ரூ.70 கோடி பொருள் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், திரையரங்குகளுக்கு விற்பனை செய்ததன் மூலம் கிட்டத்தட்ட ரூ.35 கோடி வருமானம் பெற்றது. தொலைக்காட்சி சானல்கள் மூலம் சில கோடி வருவாய் ஈட்டப்பட்டிருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் படக் குழுவுக்கு ரூ.20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்றுதான் கணக்குகள் கூறுகின்றன.

சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் கதை மற்றும் இயக்கத்தை ருத்ரமாதேவி பட புகழ் குணசேகரன் ஏற்றிருந்தார்.

மகாகவி காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாப்பாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்திருந்தனர்.

உடல்நிலை சரியில்லாதபோதும் சாகுந்தலம் புரோமோஷன் நிகழ்வுகளில் சமந்தா கலந்துகொண்டார். இதனால், இப்படத்தின் தோல்வி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.