தமிழில் மாரி 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ். ஆனால் மலையாளத்தில் 2012லியே நடிக்க ஆரம்பித்தார். என்னு நிண்டே மொய்தீன், மாயநதி, தீவண்டி, எண்ட உம்மண்டே பேரு, மின்னல் முரளி, தல்லுமாலா என பல அற்புதமான படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க: அக்காவிற்காக திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்!
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில் டோவினோ நடித்துள்ளார். கேரளத்தில் மே 5ஆம் தேதி வெளியான இப்படம் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலைக் கடந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
2022இல் வெளியான தல்லுமாலா திரைப்படம் அதன் படமாக்கும் வித்ததிற்காக வெகுவாக பாராட்டப்பட்டது. இந்தப் படத்தினை பார்த்துதான் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார். எதிர்பாராத ஒன்றாக இந்த வாழ்த்து இருந்ததாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் டோவினோ தாமஸ் இதனை தெரிவித்துள்ளார்.
லோகேஷ் உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார் டோவினோ தாமஸ். விரைவில் நடக்குமெனவும் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.