உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்ட நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜானகி ஜானு என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு பகுதிகளிலும் ப்ரோமோஷன் பணிகளுக்காக அவர் சென்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தபோது அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதுடன், நவ்யா நாயர் உடல்நிலை குணமடைந்தவுடன் ஓரிரு நாள்களில் அந்நிகழ்ச்சி மீண்டும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை நவ்யா நாயார் கோழிக்கூட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் அழகிய தீயே படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நவ்யா நாயர் தற்போது மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.