
குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகைக்கு வழிபாட்டுக்காகச் சென்றுள்ளர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். அவரிடம் அடுத்த மக்களவை தேர்தலில் போட்டியிடுவீர்களா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கங்கனா, “கடவுள் கிருஷ்ணர் ஆசிர்வதித்தால் நான் போட்டியிடுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “அயோத்தியில் ராமரை வழிபட இருந்த தடைகளை நீக்கியதன் மூலம் 600 ஆண்டுகளாக யாரும் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: வெளியானது இந்தியன் - 2 அறிமுக விடியோ!
சமீபத்தில் வெளியான கங்கனாவின் தேஜஸ் திரைப்படம் கடுமையான தோல்வியைச் சந்தித்தது. அதனால் அமைதி வேண்டி துவாரகதீசர் கோயிலுக்குச் சென்றதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.