

வசதி படைத்தவர்கள் மட்டுமே காலம் காலமாக பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதாக இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திணிக்கப்பட்ட தீபாவளியையும், தமிழர்களின் பொங்கல் திருநாளையும் வசதி படைத்தவர்கள் மட்டுமே காலம் காலமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
இவ்வாறின்றி, பிள்ளைகளுக்காகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்காகவும் படாத பாடுபட்டு பணம் புரட்டி பண்டிகைகளை கடத்தும் ஒவ்வொரு பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாளே உண்மையான திருநாட்கள்!
நடைமுறைக்காக ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் இனிமேலாவது இம்மக்களின் நிலையை எண்ணி இது குறித்தும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.