
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீப காலமாக முக்கியமான படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.
இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான, ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது.
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: தேசிய உரிமைப் பாடலை சிதைத்தாரா? சர்ச்சையில் ஏ.ஆர்.ரஹ்மான்!
இந்நிலையில், உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் மோதிக்கொண்டிருக்கும் இந்திய, நியூசி ஆட்டத்தின்போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கேட்ட கேள்வி ஒன்றிற்கு, அடுத்ததாக கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளதாக கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
இது, இரண்டு கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட அளவிலிருந்து மாநில அளவில் கிரிக்கெட் விளையாட செல்லும் கதையாக உருவாக உள்ளதாகக் கூறியிருக்கிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...