பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை கார்த்திகா நாயரின் திருமணம்! 

பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை கார்த்திகா நாயரின் திருமணம்! 

நடிகை  கார்த்திகா நாயரின் திருமண நேற்று கேரளாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 
Published on

நடிகை ராதாவின் முதல் மகள் கார்த்திகா நாயர். கே.வி. ஆனந்த்  இயக்கத்தில் ஜுவாவுடன்  ‘கோ’ படத்தில்  தமிழில் நடிகையாக அறிமுகமானார். மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு 2013இல் அன்னக்கொடி படத்தில் நடித்தார். 

சில மலையாளப் படங்களிலும் தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ள கார்த்திகா நாயரின் கடைசிப் படமாக தமிழில் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தில் நடிந்திருந்தார். 

ரோஹித் மேனன் என்பவருடன் கேரளாவில் நேற்று (நவ.19) பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமண நிகழ்வுக்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ஜாகி செராஃப், நடிகைகள் ராதிகா சரதகுமார், சிஹாசினி, ரேவதி, மேனகா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எங்களது கனவு வாழ்க்கை துவங்க இருக்கிறது எனப் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com