தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

டிசம்பர் மாதம் அப்பாக்களுக்கான மாதம்: நானியின் கலகலப்பான பேச்சு!

பிரபல தெலுங்கு நடிகர் நானி டிசம்பர் மாதம் அப்பாக்களுக்கான மாதம் எனக் கூறியுள்ளார். 

News image

படம்: எக்ஸ்

Updated On :2 பிப்ரவரி 2024, 8:56 am IST

தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ படங்களின் மூலம் பிரபலமானவர் நானி. தெலுங்கில் வெளியான நானியின் ஜெர்ஸி, கேங்கு லீடர், சியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா, தசாரா ஆகிய படங்கள் பெரும் வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Story image

நானியின் 30வது படத்தினை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஷௌர்யுவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ‘ஹாய் நான்னா’ எனப் பெயரிட்டுள்ளார்கள். வைரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்குர் நடித்துள்ளார். 

Story image

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹீஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ளார்.  சமந்த விஜய் தேவரகொண்ட நடித்த குஷி படத்திற்கும் இதே இசையமைப்பாளர்தான். குஷி படத்தில் அனைத்து பாடல்களும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. 

நல்ல பொழுதுபோக்கான படங்களை தேர்வு செய்து நடிக்கும் நானியின் படங்களுக்கு தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் இந்தப் பத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது. 

சமீபத்திய பட புரமோஷன் ஒன்றில் நடிகர் நானி, “டிசம்பர் மாதம் அப்பாக்களுக்கான மாதம். ஏனெனில் என்னுடைய படமும் அப்பாக்களின் பாசத்தினை பற்றியது. அனிமல் என்றொரு படம் வருகிறது. அந்தப் படமும் அப்பா பாசம் பற்றியது. இரண்டு படங்களும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” எனக் கூறினார். 

Story image

அனிமல் படம் டிச.1ஆம் தேதி பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. நானியின் ஹாய் நான்னா படமும் டிச.21ஆம் நாள் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது குறிப்பித்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.