தாய்லாந்தில் எதிர்நீச்சல் நாயகி! குணசேகரன் வீட்டு மருமகளா இது?

புதுவசந்தம் தொடரில் நடித்து வரும் வைஷ்ணவியும் அவருடன் தாய்லாந்து சென்றுள்ளார்
தாய்லாந்தில் மதுமிதா - வைஷ்ணவி
தாய்லாந்தில் மதுமிதா - வைஷ்ணவி
Published on
Updated on
2 min read

எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை மதுமிதா தாய்லாந்துக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

தனது தோழியும் புதுவசந்தம் தொடரில் வில்லியாக நடித்துவரும் வைஷ்ணவியுடன் இந்த பயணத்தை மதுமிதா மேற்கொண்டுள்ளார். 

இரு பெண்கள் மட்டுமே மேற்கொண்டுள்ள நீண்ட பயணம் என்று குறிப்பிட்டுள்ள மதுமிதாவின் சமூக வலைதளப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் மூன்று மருமகள்களை மையமாகக் கொண்டு  ஒளிபரப்பாகி வருகிறது. 

ஆணாதிக்கம், பிற்போக்குத்தன்மை கொண்ட  குடும்பத்தில் மருமகள்களாக வரும் பெண்களை அடக்கி வைப்பதும், மருமகள்கள் அதற்கு எதிராக குரல் எழுப்புவதுமே எதிர்நீச்சல் தொடரின் மையக்கதை.

எதிர்நீச்சல் ஜனனி பாத்திரத்தில் மதுமிதா
எதிர்நீச்சல் ஜனனி பாத்திரத்தில் மதுமிதா

இக்கதையில் ஆதி குணசேகரனின் சகோதரர் சக்தியின் மனைவியாக (ஜனனி) நடிப்பவர் நடிகை மதுமிதா. புடவை அணிந்த புதுமைபெண்ணாக எதிர்நீச்சலில் தோன்றும் மதுமிதாவுக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களிலும் பெரும்பாலும் அவர் பதிவிடும் படங்கள் மற்றும் விடியோக்கள் புடவை அணிந்தவாறு பாரம்பரியமாகவே இருக்கும். புடவை, சுடிதார் போன்ற உடைகளில் ரசிகர்கள் பார்த்துப் பழகிய (மதுமிதா) ஜனனி, தற்போது மார்டன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தொடர் படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுக்கும் வகையில், நடிகை மதுமிதா தாய்லாந்துக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளார். புதுவசந்தம் தொடரில் நடித்து வரும் வைஷ்ணவியும் அவருடன் தாய்லாந்து சென்றுள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இருவர் மட்டுமே மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தின் புகைப்படங்களை தங்களின் சமூக வலைதளங்களில் இருவரும் பகிர்ந்துள்ளனர். அதற்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

தாய்லாந்து விடுதியில் வைஷ்ணவியுடன் மதுமிதா
தாய்லாந்து விடுதியில் வைஷ்ணவியுடன் மதுமிதா

கர்நாடகத்தைச் சேர்ந்த மதுமிதா, பல முன்னணி தெலுங்கு தொடர்களில் நடித்துள்ளார். எனினும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் அதிக எண்ணிக்கையிலான தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலர் ஆதி குணசேகரன் வீட்டு மருமகளா இது என கேலியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com