பிக்பாஸ் சீசன் 7-ல் பங்கேற்கும் 18 போட்டியாளர்கள் யார்? 

விஜய் தொலைக்காட்சியில் கோலாகலமாகத் துவங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 7-ல் பங்கேற்கும் 18 போட்டியாளர்கள் யார்? 

விஜய் தொலைக்காட்சியில் கோலாகலமாகத் துவங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நேற்று (அக். 1) கோலாகலமாகத் தொடங்கிவுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்களை கமல்ஹாசன் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். முதல் போட்டியாளராக கூல் சுரேஷும், இறுதி போட்டியாளராக நடனக் கலைஞர் விஜய் வர்மாவும் நுழைந்தனர். 

போட்டியாளர்கள் விவரம்:

கூல் சுரேஷ்(துணை நடிகர்) : அண்மையில் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு மாலை அணிவித்து சர்சையில் சிக்கியவர். 

பூர்ணிமா ரவி(யூடியூப் பிரபலம்): அராத்தி என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர். 

ரவீனா தாஹா(சின்னத் திரை நடிகை): தங்கம் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார்.

பிரதீப் ஆண்டனி(துணை நடிகர்): வாழ் திரைப்படத்தில் நாயகனாக நடித்திருப்பவர் பிரதீப் ஆண்டனி. டாடா பட கவினின் நெருங்கிய நண்பராகவும் அறியப்படுபவர்.

நிக்ஸன்: (ராப் பாடகர்)

வினுஷா தேவி(சின்னத் திரை நடிகை): மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து முத்திரைப் பதித்தவர். பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

மணிசந்திரா(நடனக் கலைஞர்): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றவர்.

அக்ஷயா உதயகுமார்(துணை நடிகை): அண்மையில் வெளியான லவ் டுடே படத்தில் நடிகை இவானாவின் தங்கையாக வந்து கவனம் பெற்றவர். 

ஜோவிகா விஜயகுமார்: (வனிதா விஜயகுமாரின் மகள்)

ஐஸூ(நடனக் கலைஞர்): முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அமீரின் தங்கை. 

விஷ்ணுவிஜய்(சின்னத் திரை நடிகர்): சின்னத்திரை நடிகரான இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா தொடர் மூலம் பிரபலமானவர். 

மாயா எஸ்.கிருஷ்ணா(துணை நடிகை): மகளிர் மட்டும், வேலைக்காரன், 2.O, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் விரையில் வெளியாகவுள்ள லியோ படத்திலும் இவர் நடித்துள்ளார்.

சரவணா விக்ரம்(சின்னத் திரை நடிகர்): பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைசி தம்பியாக நடித்திருப்பவர் சரவணா விக்ரம்.

யுகேந்திரன் வாசுதேவன் (பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன்), விசித்ரா(துணை நடிகை): இவர் பகவதி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

விசித்திரா: இவர் பல படங்களில் கவர்ச்சி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார்.

பவா செல்லத்துரை(எழுத்தாளர்): எழுத்தாளராக அறியப்படும் இவர் ஜோக்கர், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அனன்யா: மாடலிங் துறையில் இருந்து வந்தவர். 

விஜய் வர்மா: (நடனக் கலைஞர்) ஆகியோர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இடம்பெற்றுள்ளனர். 

கடந்த ஆறு சீசன்களை வெற்றிகரமாகத் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் 7வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார். கடந்த சீசன்களில் ஒரு வீட்டில் போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால், இம்முறை 2 பிக் பாஸ் வீடுகள் உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார். இதனால், பிக் பாஸ் -7 மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com