லியோ பட விமர்சனத்தை பதிவிட்ட அனிருத்! 

லியோ பட விமர்சனத்தை பதிவிட்ட அனிருத்! 

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தினை குறித்து அனிருத் எக்ஸில் பதிவிட்டுள்ளார். 
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  இப்படத்தின் டிரைலர் இதுவரை 44 மில்லியன் (4.4 கோடி) பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. 

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், “லியோ” எனப் பதிவிட்டு நெருப்பு எமோஜிக்கள் உடன் பல கோப்பைகள் இருக்கும் எமோஜிக்களை பதிவிட்டுள்ளார். 

ஜவான், ஜெயிலர் படத்துக்கும் இதுபோல எற்கனவே அனிருத் பதிவிட்டுள்ளார். அதாவது லியோ படத்துக்கான பின்னணி இசைகளை அனிருத் முடித்துவிட்டு படத்தினையும் பார்த்துவிட்டதாக அர்த்ததெமன ரசிகர்கள் இது குறித்து பதிவிட்டு வருகிறார்கள். 

ஜவான், ஜெயிலரைவிட இது சிறப்பாக இருக்குமென அவரது எமோஜிக்களை வைத்து புரிந்து கொள்ளலாம் எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com