சுழல் பந்துகளுக்கு எதிரான ஆஸி. வீரர்களின் மனநிலை மாற வேண்டும்: அறிவுரை வழங்கிய முன்னாள் கேப்டன்! 

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸி. அணியின் தோல்விக்கான காரணத்தை கூறியுள்ளார் முன்னாள் கேப்டன். 
சுழல் பந்துகளுக்கு எதிரான ஆஸி. வீரர்களின் மனநிலை மாற வேண்டும்: அறிவுரை வழங்கிய முன்னாள் கேப்டன்! 

உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

அழுத்தமான சூழலில் விராட் கோலி (85) மற்றும் கே.எல்.ராகுலின் (97) அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  

இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள்: 30 ஓவர்கள் வீசி 104 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்தனர். 

ஆஸி. சுழல் பந்து வீச்சாளர்கள்: 16 ஓவர்கள் வீசி விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் கொடுத்தனர்.

இது குறித்து முன்னாள் கேப்டனும் ஆஸி. வீரருமான ஆரோன் பின்ச் கூறியதாவது: 

சுழல் பந்துகளுக்கு எதிரான மனநிலையை ஆஸ்திரேலிய வீரர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அதிரடியான பாணியை கைக்கொள்ளாததே இந்தப் பிரச்னைகளுக்கு காரணம். ஒரு அடி முன்னோக்கி வைத்து ஆடியிருந்தால் ஆட்டமே மாறியிருக்கும். 

3 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய ஜடேஜா. 
3 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய ஜடேஜா. 

இந்தியா பேட்டிங்கின்போது 2/3 என இருக்கும்போது எது வேண்டுமானால் நடந்திருக்கலாம். 12 ரன்கள் இருக்கும்போது விராட்டின் பந்து காற்றில் இருக்கும்போது மைதானமே அமைதியாக இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு விராட் கோலியின் ஆட்டம் வேற லெவலில் இருந்தது. சேஸிங்கில் விராட் கோலியும் கே.எல்ராகுலும் அற்புதமாக விளையாடினார்கள். 

ஆடம் ஜாம்பாவுக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை வலியினால் சரியாக பந்து வீச முடியவில்லை. ஜாம்பாவின் ஓவரில் கே.எல்.ராகுல் அற்புதமாக லேட் கட் விளையாடி ஜாம்பின் மனநிலையை குழைத்துவிட்டார் என பின்ச் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com