சேப்பாக்கத்தில் ஆஸி.யின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா!

உலகக் கோப்பை வரலாற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சேப்பாக்கத்தில் ஆஸி.யின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா!

உலகக் கோப்பை வரலாற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

உலகக் கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும்  கே.எல்.ராகுலின்  நிதான ஆட்டத்தால் இந்திய அணி 6  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை  வீழ்த்தியது. மேலும், உலகக் கோப்பை போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியடைந்ததே இல்லை என்ற ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. 

இதற்கு முன்னதாக, மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியுள்ளது. 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில்  இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டியிலும், 1996 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஆஸ்திரேலியா சென்னை சேப்பாக்கம்  மைதானத்தில் விளையாடியது. இந்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றது. அதிலும், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.

இந்த நிலையில், உலகக் கோப்பையில் நேற்றையப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது. 

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும், விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலின் பொறுப்பான நிதான ஆட்டத்தால் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com