தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார். 
தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

உலகக் கோப்பைத் தொடரின் நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

அழுத்தமான சூழலில் விராட் கோலி (85) மற்றும் கே.எல்.ராகுலின் (97) அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  

கே.எல்.ராகுல் 97  ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். மேலும், ஆட்ட நாயகன் விருதினையும் பெற்றார். 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் பட்டியலில் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை சாதனையை கே.எல்.ராகுல் முறியடித்துள்ளார். ஆனால் இந்தப் பட்டியலில் ராகுல் திராவிட் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர்களில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர் பட்டியல்: 

ராகுல் திராவிட் -145 (இலங்கைக்கு எதிராக) 
கே.எல்.ராகுல் - 97 (ஆஸி.க்கு எதிராக) 
எம்.எஸ்.தோனி - 91 (இலங்கைக்கு எதிராக) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com