மீண்டும் ஜார்வோ: இந்த முறை சென்னை சேப்பாக் மைதானம்! 

லண்டனில் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்த ஜார்வோ இந்த முறை  சென்னையில் உள்நுழைந்தார். 
படம்: எக்ஸ்
படம்: எக்ஸ்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அத்துமீறி நுழைந்த ஜார்வோவை லண்டன் காவல்துறை கைது செய்யப்பட்டார். 

யூடியூப் தளத்தில் 1.27 லட்சம் ஆதரவாளர்களைக் கொண்டவர் ஜார்வோ. 2021இல் லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த ஜார்வோ, இங்கிலாந்து இன்னிங்ஸின்போது திடீரென மைதானத்துக்குள் ஓடிவந்தார். கையில் பந்துடன் வந்த ஜார்வோ, இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ மீது மோதினார். இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. உடனே பாதுகாவலர்கள் மைதானத்துக்குள் வந்து ஜார்வை அழைத்துச் சென்றார்கள். இதையடுத்து ஜார்வோவை மெட்ரோபாலிடன் காவலர்கள் கைது செய்துள்ளார்கள். 

இதற்கு முன்பு லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் மைதானங்களில் டெஸ்ட் நடைபெற்றபோதும் மைதானத்தில் அத்துமீறி நுழைந்தார் ஜார்வோ. லீட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன் போல உடையணிந்து மைதானத்துக்குள் நுழைந்தார். இதன் விடியோவையும் Jarvo69 aka BMWJarvo என்கிற தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து லீட்ஸ் மைதானத்தில் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியா-ஆஸி. உலகக் கோப்பை போட்டியின்போது சென்னை சேப்பாக் மைதானத்தில் அத்துமீறி நுழைந்துள்ளார் ஜார்வோ. 

விராட் கோலி ஜார்வோவிடம் பேசி வழியனுப்பி வைத்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com