துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படமான விடாமுயற்சியை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு புணேவில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. பின்னர் சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4இல் அஜர் பைஜானில் தொடங்கியதாகவும் தொடர்ந்து 3 மாதம் அங்கு படப்பிடிப்பு நடத்த மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியது.

Happy Bday to my Dearest Big Brother. I wish you only the best as always...
â Aarav Kizar (@Aravoffl) October 9, 2023
May this year be filled with a Blockbuster success.
Thank you for believing in me. You are an absolute gem of a person...
Love you Sir#VidaaMuyarchi #MagizhThirumeni pic.twitter.com/qACKjH90bw
இந்நிலையில் இயக்குநர் மகிழ் திருமேனி பிறந்தநாளினை முன்னிட்டு நடிகர் ஆரவ் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதில் தன்னை நம்பியதற்கு நன்றி எனக் கூறியுள்ளார். எற்கனவே, உதயநிதியை வைத்து மகிழ்திருமேனி இயக்கிய ‘கலகத் தலைவன்’ படத்தில் வில்லனாக ஆரவ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்திய சினிமாவில் முதன்முறை: ஜவான் வரலாற்று சாதனை!

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஆரவ் தற்போது ரம்யா பாண்டியனுடன் ஒரு படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!

பிரசாந்த் கிஷோருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



