இந்தியா - பாக். போட்டி: ரஜினி, அமிதாப் பச்சன் பங்கேற்பு; 11,000 போலீசார் பாதுகாப்பு

இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் காணவுள்ளதால் 11,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
இந்தியா - பாக். போட்டி: ரஜினி, அமிதாப் பச்சன் பங்கேற்பு; 11,000 போலீசார் பாதுகாப்பு

இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் காணவுள்ளதால் 11,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

ஐசிசி 13-வது ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த தொடரின் முக்கிய போட்டியாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை மறுநாள்(அக்.14) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை மிக பிரமாண்டமாக பிசிசிஐ மற்றும் ஐசிசி தரப்பில் செய்யப்பட்டு வருகிறது. இந்த போட்டியை நேரில் காண ‘கோல்டன் டிக்கெட்’ வழங்கப்பட்டுள்ள ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் வருண் தவானும் தனது தந்தையுடன் போட்டியை காண வரவுள்ளார்.

மேலும், ஐசிசி, பிசிசிஐ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளும் போட்டியை நேரில் காணவுள்ளனர்.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பாலிவுட் பாடகர் அர்ஜித் சிங்கின் இசை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நரேந்திர மோடி மைதானத்தில் சுமார் 1.32 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காணவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7,000 குஜராத் போலீசாரும், 4,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

அதுமட்டுமின்றி, தேசிய பாதுகாப்புப் படையின் 3 குழுக்கள், அதிரடிப் படையின் 3 கம்பெனிகள், மாநில ரிசர்வ் காவல் படையின் 13 கம்பெனி வீரர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com