உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

விதிகளை மீறும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்புக் குழு- சென்னை காவல் ஆணையர்

சென்னையில் லியோ திரைப்படம் திரையிடுதலில் விதிகளை மீறும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:38 am IST

சென்னையில் லியோ திரைப்படம் திரையிடுதலில் விதிகளை மீறும் திரையரங்குகளை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்தப் படத்தில்  த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் வருகின்ற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் அதிகாலைமுதலே லியோ சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, லியோ சிறப்புக் காட்சி காலை 9 மணிமுதல்தான் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 19ஆம் தேதிமுதல் 6 நாள்களுக்கு லியோ படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படவுள்ள நிலையில், இந்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. திரையரங்குகளில் 6 நாள்களுக்கு தினமும் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்றும், அரசு விதிமுறைகளின்படி ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு, வாகன நிறுத்த வசதி உள்ளிட்டவை செய்துதர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, சென்னையில் லியோ திரைப்படம் திரையிடுதலில் விதிகளை மீறும் திரையரங்குகளை கண்காணிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.