லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்.19-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகிறது.
இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜூன், த்ரிஷா, கவுதம், மிஷ்கின் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லியோ படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “தளபதி விஜய் அண்ணனின் லியோ தரம், லோகேஷ் கனகராஜின் சிறப்பான உருவாக்கம். அன்பறிவு மாஸ்டர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸுக்குப் பாராட்டுக்கள். எல்சியூதான். படக்குழுவிற்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து லியோ படம் எல்சியூ தான் என இணையத்தில் ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கினர். நாளை (அக்.19) படம் வெளியாக உள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எல்சியூ எனக் குறிப்பிட்டு உதயநிதி ட்வீட் செய்தது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் அந்த ட்வீட்டிலேயே எல்சியூ-க்கு பக்கத்தில் அவர் கண்ணடித்த எமோஜி போட்டிருந்தார் பார்த்தீர்களா? லியோ நாளை வெளியாகிவிடும். படம் எல்சியூவா இல்லையா என்பதை நாளை தியேட்டருக்கு சென்று பாருங்கள் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வட கொரியாவுடன் அமைதிப் பேச்சு - தென் கொரிய அதிபா்

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 16) - கும்ப ராசிக்கு வெற்றி!

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை ஆண்டு விழா
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



