மீண்டும் பேயாக மிரட்டும் ஹன்சிகா!

நடிகை ஹான்சிகா மீண்டும் பேயாக நடிக்கும் கார்டியன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மீண்டும் பேயாக மிரட்டும் ஹன்சிகா!

நடிகை ஹான்சிகா மீண்டும் பேயாக நடிக்கும் கார்டியன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஹன்சிகா, அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில், மை 3 வெப் என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். 

இவர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை - 2 படத்தில் பேயாக ஹான்சிகா நடித்து இருப்பார். இதைத் தொடர்ந்து கார்டியன் படத்திலும் பேயாக நடிக்கிறார்.

ஹான்சிகா முக்கிய வேடத்தில் நடிக்கும், கார்டியன் படத்தை சபரி மற்றும் குரு சரவணன் இணைந்து இயக்குகிறார்கள். இப்படத்துக்கு சாம் சிஸ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், ஹன்சிகா நடிக்கும் கார்டியன் படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த டீசர் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com