ஓடிடியில் இறுகப்பற்று எப்போது?

இறுகப்பற்று படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஓடிடியில் இறுகப்பற்று எப்போது?

இறுகப்பற்று படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமான யுவராஜ் தயாளன் இறுகப்பற்று படத்தினை இயக்கியுள்ளார். 

நடிகர்கள் விக்ரம் பிரபு, மாநகரம் புகழ் ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும், நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த 3 ஜோடிகளின் காதல் கதையை படமாக எடுத்துள்ளார் இயக்குநர் யுவராஜ் தயாளன். 

எஸ்.ஆர். பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, பி. கோபிநாத், தங்கபிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில், இறுகப்பற்று திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் நவ.3 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com