திருமணநாளில் நல்ல செய்தி சொன்ன குக்வித் கோமாளி புகழ்!

சின்னத்திரையில் பலரின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகரான புகழ் விரைவில் தந்தையாகவுள்ளதை அறிவித்துள்ளார். 
திருமணநாளில்  நல்ல செய்தி சொன்ன குக்வித் கோமாளி புகழ்!


சின்னத்திரையில் பலரின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகரான புகழ் விரைவில் தந்தையாகவுள்ளதை அறிவித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்துவருபவர் நடிகர் புகழ். இவர் அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராகப் பங்குபெற்றவர். 

எனினும், குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் உள ஏராளமான தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது படங்களிலும் மும்முரமாக நடித்து வருகிறார். 

நகைச்சுவை நடிகராக பல படங்களை கைவசம் வைத்துள்ள நடிகர் புகழ், மிஸ்டர் ஸூ கீப்பர் (Mr. Zoo Keeper) என்ற படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். 

இவர் கடந்த ஆண்டு (இதேநாள்) செப்டம்பர் 1ஆம் தேதி பென்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரின் திருமணத்தில் ஏராளமான திரைப்பிரலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

தற்போது புகழ் - பென்ஸி தம்பதி குழந்தைப்பேறு பெறவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கருவுற்ற பென்ஸியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு இதனை புகழ் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை. என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லைன்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்... இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com