சின்னத்திரை தொடர்களின் இந்த வார டிஆர்பி! டாப் 10 பட்டியல்!!

சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. 
சின்னத்திரை தொடர்களின் இந்த வார டிஆர்பி! டாப் 10 பட்டியல்!!

சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கயல் தொடரை பின்னுக்குத்தள்ளி எதிர்நீச்சல் தொடர் முதலிடம் பிடித்துள்ளது.

சின்னத்திரை தொடர்கள் தற்போது அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சினிமாவுக்கு இணையாக மெனக்கெடல் காட்சிகளும் வைக்கப்படுகின்றன.

பலதரப்பட்ட மக்கள் தொடர்களைப் பார்ப்பதால், சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி புள்ளிகளும் அதிகரித்து வருகின்றன. 

10வது இடத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடர் இடம் பெற்றுள்ளது. 

9வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  பாக்கியலட்சுமி தொடர் உள்ளது.

8வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிடித்துள்ளது. 

7வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியின் புதிய தொடரான சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. 

6வது இடத்தில் சன் தொலைக்காட்சியின் மிஸ்டர் மனைவி தொடர் இடம்பிடித்துள்ளது. 

அடுத்த முதல் 5 இடங்களையுமே சன் தொலைக்காட்சியின் தொடர்கள்தான் பிடித்துள்ளன. 

5வது இடத்தில் ஆல்யா மானசா நடித்துவரும் இனியா தொடர் இடம்பெற்றுள்ளது. (டிஆர்பி: 9.42 புள்ளிகள்)

4வது இடத்தில் அண்ணன் - தங்கை பாசத்தை வைத்து எடுக்கப்பட்டு வரும் வானத்தைப் போல தொடர் உள்ளது. (டிஆர்பி: 9.83 புள்ளிகள்)

3வது இடத்தில் தற்போது நிறைவடைந்துள்ள சுந்தரி தொடர் உள்ளது. இந்தத் தொடரில் நாயகி ஒருவழியாக ஆட்சியராகியுள்ளார். இந்தத் தொடரின் 2ஆம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. அதில் ஆட்சியராக அவரின் பணிகள் தொடரும். (டிஆர்பி: 9.97 புள்ளிகள்)

2வது இடத்தில் பலரின் மனம் கவர்ந்த கயல் தொடர் உள்ளது. இந்தத் தொடர் கடந்த வாரம் முதலிடம் பிடித்திருந்தது. ஆனால் இம்முறை இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. (டிஆர்பி: 11.39 புள்ளிகள்)

முதலிடத்தில் சன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் தொடர் உள்ளது. (டிஆர்பி: 11.45 புள்ளிகள்) சமூகவலைதளங்களில் பெரிதும் பேசப்படும் தொடராக எதிர்நீச்சல் மாறியுள்ளது. எதிர்நீச்சல் தொடரின் பாத்திரங்கள் பெரும்பாலும் தனித்துவமாகவும் நிஜ வாழ்க்கை மனிதர்களை பிரதிபலிப்பதாகவும் உணரச்செய்வதே அத்தொடரின் பலமாக பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com