விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடியவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்களின் குடும்பங்களுக்குட்பட்ட கதையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதில் நான்கு சகோதர்களுக்கும் திருமணம் நடைபெற்று அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை காட்சிகளாக அமைத்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் நீண்ட நாள்கள் ஒளிபரப்பாகிவரும் தொடரிகளில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மாறியுள்ளது. தொடர்ந்து 5வது ஆண்டாக ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடரை முடிக்க விஜய் தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது.

இதோடு மட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் பெரும்பாலான தொடர்கள் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் பட்டியலில் விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு: அரசுடன் போராட்டக்குழு பேச்சுவார்த்தை!
தமிழ்நாட்டின் நலனை விரும்புபவர்களே எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்! காங்கிரஸ்
ஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!

பொறியியல் 2-ஆம் சுற்று கலந்தாய்வு: 79,403 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு! இன்று உறுதிப்படுத்துதல் அவசியம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



