தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் அதிலிருந்து மீண்டு, பின்னர் படங்களில் நடித்து வருகிறார்.
யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் அவரது படப்பிடிப்பு முடிந்ததாக தெரிவித்திருந்தார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஷிவ நிர்வாணா இயக்கியுள்ளார். ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ளார். ஷிவ நிர்வாணா இயக்கிய மஜிலி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. செப்.1ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியானது.
தெலுங்கில் நல்ல வரவேற்பும் தமிழில் கலவையான விமர்சனமும் பெற்றுவருகிற குஷி திரைப்படம் 2 நாள்களில் ரூ.51 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனையில் விரைவில் சூரியஒளி மின்சாரத் திட்டம்

ஷேக் ஹசீனாவும் இந்தியாவின் தா்மசங்கடமும்...
சிப்காட் விவகாரம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை வலியுறுத்தும் கிராமத்தினா்

மேட்டூர் அணை நிலவரம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



