/

மார்க் ஆண்டனி டிரைலர்: ஆதரவுக்கு நன்றி தெரிவித்து விடியோ வெளியிட்ட விஷால்! 

நடிகர் விஷால் மார்க் ஆண்டனி பட டிரைலர் ஆதரவுக்கு விடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :4 செப்டம்பர் 2023, 6:42 pm IST

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

Story image

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் டிரைலர் (செப்டம்பர் 3) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. 23 மணி நேரத்தில் 1.6 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் விடியோ வெளியிட்டு டிரைலருக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. படமும் இதேபோல உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். தற்போது மும்பைக்கு புரமோஷனுக்காக சென்றுள்ளார். 

Story image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு (செப்.15) மார்க் ஆண்டனி வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.