தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பரவிவரும் டெங்கு காய்ச்சல்; மக்களின் உயிரோடு விளையாடும் தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் குறித்து பேசிய காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?: ரசிகர்கள் கொந்தளிப்பு!

ஜவான் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லி நடிகர் விஜய் குறித்து பேசிய காட்சிகள் நீக்கப்பட்டது ஏனென ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Published On :

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஜவான் இசை வெளியீட்டு விழா ஆக.30ஆம் நாள் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் அட்லி நடிகர் விஜய் குறித்து பேசியிருந்தார். “இந்தப் படம் இயக்குவதற்கு நம்பிக்கையளித்தவரும் விஜய் அண்ணாதான் காரணம். எனது அண்ணன் எனது தளபதி” என்று பேசியிருந்தார். மேலும் படங்கள் சீக்கரமே எடுத்து வெற்றி பெற்றதற்கும் காரணம் விஜய்தான் என்றார். 

இசை வெளியீட்டு விழா சன் டிவியில் ஞாயிற்றுக் கிழமை மதியம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் விஜய் குறித்து அட்லி, ஷாருக்கான், ப்ரியாமணி பேசிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் ட்விட்டரில் (எக்ஸ்) சன் டிவியிடம் கேள்விகள் கேட்டனர். பின்னர் இதற்கு சன் டிவி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “ஜவான் இசை வெளியீட்டு விழாவை ரசித்தீர்களா? தயாரித்து எடிட் செய்தது கோகுலம் மூவிஸ்” எனப் பதிவிட்டிருந்தது. 

பின்னர் விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன், “இவர்கள் விஜய்யின் வளர்ச்சியை நினைத்து பயப்படுகிறார்கள்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.  மேலும் ‘தளபதி விஜய்’ என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜவான் திரைப்படம் செப்.7ஆம் நாள் வெளியாக உள்ளது. நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் அக்.19ஆம் நாள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.