
நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற தீபாவளி (நவ.12) அன்று அயலான் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: இவ்வளவு நாள் இந்தியா என்ற பெயர் பெருமை தரவில்லையா?: சேவாக்கிடம் விஷ்ணு விஷால் கேள்வி!
இந்நிலையில், அயலான் படத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால் 2024 பொங்கல் வெளியீடாக இப்படம் மீண்டும் தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...