காப்பகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சின்னத்திரை நடிகை! குவியும் வாழ்த்து!!

ஆனந்த ராகம் தொடரில் பல சாகச சண்டைக் காட்சிகளில் அனுஷா நடிப்பதால், சின்னத்திரை அதிரடி நாயகி என்ற பெயரும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு உண்டு.
காப்பகத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சின்னத்திரை நடிகை! குவியும் வாழ்த்து!!
Published on
Updated on
2 min read


சின்னத்திரை நடிகை அனுஷா பிரதாப் தனது பிறந்தநாளைக் மனநல காப்பகத்தில் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் பலரால் பகிரப்பட்டு வருகின்றன.  

நடிகை அனுஷா தனது மனம் போலவே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஆனந்த ராகம் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவருபவர் அனுஷா பிரதாப். இவர் நடித்துவரும் ஆனந்த ராகம் தொடர் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்தத் தொடரில் பல சாகச சண்டைக் காட்சிகளில் அனுஷா நடிப்பதால், அவருக்கு சின்னத்திரை அதிரடி நாயகி என்ற பெயரும் ரசிகர்கள் மத்தியில் உண்டு.

ஆனந்த ராகம் தொடரில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் அனுஷா நடித்துவருகிறார். அழகு சுந்தரம் பாத்திரத்தில் நடிகர் அழகப்பன் ஜோடியாக நடிக்கிறார். அவர்களுடன் பிரீத்தி சஞ்சய், இந்து செளத்ரி, சிவரஞ்சினி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

நடிகை அனுஷா இதற்கு முன்பு கன்னட தொடரில் நடித்துள்ளார். ஆனந்த ராகம் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த அவர், இன்று தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 

பிறந்தநாளை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடி, காப்பாத்திலுள்ள அனைவருக்கும் மதிய உணவு அளித்துள்ளார். 

அவர்களுடன் கேக் வெட்டி, அவர்களுடன் பேசி விளையாடிய புகைப்படங்களை அனுஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சின்னத்திரை தொடரில் அநீதிக்கு எதிரான அதிரடி நாயகியாக இருக்கும் அனுஷா, நிஜத்திலும் அன்புள்ளம் கொண்டு அரவணைப்பவராக உள்ளார். 

அனுஷாவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை அனுஷா தனது மனம் போல மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com