மீண்டும் சீரியலுக்கு வரும் பிரியங்கா! ஒளிபரப்பு உரிமம் பெற்ற பிரபல டிவி!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நல்காரி.

நளதமயந்தி தொடரில் பிரியங்காவின் தோற்றம்

Published On :


ரோஜா தொரின் மூலம் புகழ் பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி மீண்டும் சின்னத்திரை தொடரில் நடிக்கவுள்ளார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் தெலுங்கு, தமிழில் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும், ரோஜா தொடரில் நடித்ததால், இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

Story image

ரோஜா தொடர் ஒளிபரப்பான காலகட்டத்தில் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வந்தது. அதில் நாயகனாக நடித்த சிபு சூர்யன் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்தார். 

பிரியங்கா நல்காரி சன் தொலைகாட்சியிலிருந்து ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நாயகியாக நடித்து வந்தார். சீதா ராமன் தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த சமயத்தில், திடீரென தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

Story image

காதலரை திருமணம் செய்துகொண்டதால், அவருடன் நேரத்தை செலவிட விரும்புவதாகவும், வெளிநாட்டில் அவருடன் தங்கியிருப்பதால், சூட்டிங்கிற்கு வந்து செல்ல முடியவில்லை எனவும் குறிப்பிட்டு சீதா ராமன் தொடரிலிருந்து விலகினார். 

திருமணத்திற்கு பிறகு பிரியங்கா தொடரில் நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில், மீண்டும் சின்னத்திரை தொடரில் பிரியங்கா தனது ரீ-என்ட்ரியை கொடுக்கவுள்ளார். 

Story image

ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள நளதயமந்தி என்ற தொடரில் முதன்மை பாத்திரத்தில் பிரியங்கா நல்காரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தொடரில் நடிப்பதற்கான முன்னோட்டம் நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. 

இடைவேளைக்குப் பிறகு பிரியங்கா மீண்டும் நடிக்கவுள்ளதால், அவரின் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.