
இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இதையும் படிக்க: இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மரணம்
இந்நிலையில், இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால், இதுவரை வெளியான பாலிவுட் படங்களிலேயே முதல்நாள் வசூலில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்த படமாக உருமாறியுள்ளது.
இதையும் படிக்க: தடுமாறுகிறாரா ஜவான்? திரைவிமர்சனம்
ஜவான் திரைப்படம் டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே ரூ.40 கோடியைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.