பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜவான்: முதல் நாள் ரூ.129 கோடி, 2வது நாள் ரூ.240கோடி, 3வது நாள் எவ்வளவு? 

அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் படத்தின் வசூல் விவரங்கள் பாலிவுட்டினை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Published On :

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில்  நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் நேற்று உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.129.6 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Story image

2வது நாளில் உலகம் முழுவதும் ரூ. 240.47 கோடி வசூலானது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. செப்.7ஆம் தேதி வெளியான படம் இன்றோடு 4வது நாளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. 

Story image

கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படத்தின் வசூல் ஜெட் வேகத்தில் உள்ளது. 3ஆம் நாள் முடிவில் ரூ.384 கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்  வெளியாகியுள்ளது. 

Story image

ஞாயிற்றுக் கிழமை மட்டும் ரூ. 44.5 கோடி அளவுக்கு முன்பதிவு வாயிலாகவே வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனி, ஞாயிறுகளில் கூடுதல் மக்கள் திரையரங்குகளை நோக்கி செல்வதால் இன்றைய நாள் முடிவில் வசூல் ரூ.500 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இன்று மாலை படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. பதான் படத்தின் சாதனையை முறியடிக்கும் என பாலிவுட் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.