
மலேசியா பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்துப் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார்.
தொடர்ந்து, நடிகர் ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இதற்கிடையே, கடந்த மாதம் இமயமலை சென்ற ரஜினி, தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு பயணம் மேற்கொண்டார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட அரசியல் தலைவர்களையும் நேரில் சந்தித்தார்.
இதையும் படிக்க | நான் ரெடி: 10 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவனுக்கு பதிலளித்த த்ரிஷா!
இந்த நிலையில், மலேசியா பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை திங்கள்கிழமை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டுள்ள அன்வர் இப்ராஹிம், ஆசிய மற்றும் சர்வதேச கலை உலகில் புகழ்பெற்ற ரஜினியை இன்று சந்தித்தேன். களத்திலும், திரையுலகிலும் ரஜினிகாந்த் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...