
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: 6-வது நாள்.. ரூ.621 கோடி வசூல்.. மிரட்டும் பாலிவுட் பாட்ஷா!
இப்படத்தின் படப்பிடிப்புஅடுத்தாண்டு துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...