ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் ரஜினிகாந்த்துடன் சன் பிக்சர்ஸ் இணைகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இதையும் படிக்க: ரசிகைக்கு நன்றி தெரிவித்த விஷால் பட நடிகை!
இதையும் படிக்க: ஜவானின் சக்தி: 9வது நாள் வசூல் விவரத்தை அறிவித்த படக்குழு!
இயக்குநர் லோகேஷ் தற்போது விஜய்யின் லியோ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது லோகேஷ் தலைவர் 171 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: மார்க் ஆண்டனி முதல் நாள் வசூல் இவ்வளவா?: படக்குழு அறிவிப்பு!
இந்நிலையில் ரஜினிகாந்திடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, “நிச்சயமாக நன்றாக வரும். ஆனால் இன்னும் காலம் தாழ்த்தி வரும். லைகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கும் படத்துக்குப் பிறகுதான் லோகேஷ் படம் ஆரம்பமாகும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: சினிமாத் துறையில் சிலர்தான் இப்படி: தனுஷை புகழ்ந்த நடிகை ராதிகா!
ஜெய் பீம் இயக்குநர் தா.சே. ஞானவேல் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.