கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சல்மான் கானுக்கு ஜோடியாக த்ரிஷா?

நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க நடிகை த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2023, 7:38 am

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.

அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு பிறகு சரியான திரைப்படம் அமையாமல் தவித்து வந்த த்ரிஷாவுக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா.

விஜய்யின் லியோ படத்தில், மலையாளத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக ராம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். த்ரிஷாவை மையமாக கொண்ட ‘தி ரோடு’ திரைப்படம் அக்.6 ஆம் தேதி வெளியாகிறது.

மேலும், அஜித்தின் விடாமுயற்சி படத்துக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் படக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு அவருக்கு ஜோடியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.