
தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து ஷங்கரின் ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உள்பட சில படங்களில் நடித்தார்.
பின், மார்க்கெட் இழந்ததால் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர் நீண்ட நாள்கள் கழித்து அருண் விஜய் நடிக்கும் 'மிஷன் அத்தியாயம் 1' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை நிச்சயதார்த்தம் செய்தார். இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனவும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆனால், திருமணத்திற்கு முன்பாகவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இதையும் படிக்க: சமுத்திரக்கனியின் திரு.மாணிக்கம் படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
தற்போது எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருகிறார். இருவரும் இந்தியாவுக்கு இணைந்தே வருகிறார்கள். இங்கு எமி ஜாக்சனின் படப்பிடிப்புகளிலும் அவர் குழந்தை ஆண்ட்ரியாஸூடன் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் எமி ஜாக்சன் புதிய தோற்றத்தில் உள்ள தன் புக படங்களை வெளியிட்டுள்ளார். ஆணைப் போன்றே தோற்றமளிக்கும் இப்படங்கள் வைரலானதால் ரசிகர்கள், இது எமியா இல்லை ஜாக்சனா என கிண்டலடித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...