இறைவன் படத்திற்கு ஏ சான்றிதழ்!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘இறைவன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இறைவன் படத்திற்கு ஏ சான்றிதழ்!

தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

என்றென்றும் புன்னகையின் இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றன.

மேலும், இப்படம் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், இறுதிக்கட்ட பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் செப்.28 ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. சைக்கோ கில்லர் கிரைம் பாணியில் உருவான இப்படத்தின் டிரைலர் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக, இதில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ராகுல் போஸின் காட்சிகள்  பின்னணி இசையில்  அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கச்சிதமாக எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும், இக்கதாபாத்திரத்திற்கு ‘ஸ்மைலி கில்லர் பிரம்மா’ என இயக்குநர் பெயரிட்டிருப்பதும் ஆவலை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், திரைப்பட தணிக்கைத் துறையில் சான்றிதழ் பெறுவதற்காக ஒளிபரப்பப்பட்ட இப்படத்தில் வன்முறை மற்றும் அரை நிர்வாணக் காட்சிகள் அதிகம் இருந்ததால் தணிக்கைத் துறையினர் ’ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளனர்.இதனால்,  2.33 மணி நேரம் ஓடக்கூடிய இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், ஏ சான்றிதழ் பெற்ற ஜெயம் ரவியின் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com